கோட்டா கோ கம போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூவரின் வங்கிக் கணக்குகளுக்கு வெளிநாட்டில் இருந்து பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரட்டா, திலான் சேனாநாயக்க மற்றும் அபிஷ்க விராஜ் கோனார என்று அழைக்கப்படும் இரத்திது சேனாரத்ன ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கே கடந்தவாரம் சுமார் 45 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்படாதபோதும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post