தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்கள் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.
Discussion about this post