சிறிலங்காவில் இருந்து மக்கள் எதிர்பாப்பால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரது நடமாட்டங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள விடுதி அறையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று தாய்லாந்து பாதுகாப்புத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்குள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும், கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் விடுதியின் பெயர் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், அங்கு விசா முடிவடைந்ததால் தாய்லாந்து சென்றுள்ளார். அவர் அங்கு 90 நாள்களுக்குத் தங்கியிருக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post