நாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அது
தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான
இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
நேற்றைய தினம் கம்பஹா பிரதேசத்தில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கொரோனா வைரஸ்
தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது, கொவிட் மரணங்களின்
எண்ணிக்கை 48.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களுக்கு செல்வதை இயன்றளவு
குறைத்துக் கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே
பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post