கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையைச் செய்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவியவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருகொடவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 26, 37 மற்றும் 45 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த 25 ஆம் திகதி வதுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவரும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்ட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post