எதிர்வரும் 2ஆம் திகதி அதிபர் ரணில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வர் ஆளும் கட்சியில் அமர தயாராக உள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை முடித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருவரிடம் குறித்த ஊடகம் கேட்டபோது, தனக்கும் இதுபோன்ற செய்தி வந்ததாக கூறினார்.
அரசாங்கத்தின் பேச்சாளர்
இதேவேளை, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் ராஜிதவை தவிர மற்றைய இருவரும் இதனை முற்றாக மறுத்திருந்தனர்.
எதிர்வரும் 2ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் அதிபர் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
நாடாளுமன்றில் விவாதம்
அந்த அறிக்கையின் பிரகாரம் அதிபரின் அறிக்கை மீதான விவாதத்தை நாளை மறுதினம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
Discussion about this post