கொழும்பிலும், அதை அண்டிய பகுதிகளிலும், கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுகின்றது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்கள் 24 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில் இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்று விசேட மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மேலும் சில கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படவுள்ளன. வைரஸ் தொடர்பான புதிய தகவல்களை அதன் பின்னர் கண்டறிய முடியும் என விசேட மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
Discussion about this post