கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து 14 லட்சம் ரூபாவை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மேல் மாகாண வடக்கு புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரும், விசேட பணியகத்தின் 2 அதிகாரிகளும், புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவரும் அடங்கியுள்ளனர்.
Discussion about this post