கொழும்பில் 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைப்பற்றபட்ட மதுபான போத்தல்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-13 பகுதியில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வர்த்தகரிடமிருந்து லேபிள்-5 ரக விஸ்கி போத்தல்கள் 99, ப்ளெக் லேபிள் ரக விஸ்கி போத்தல்கள்14, மற்றும் வெட்-69 ரக விஸ்கி போத்தல்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் கொண்டு வரும் மதுபான போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் வைத்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, பின்னர் அவற்றை பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
Discussion about this post