கொழும்பின் பாதுகாப்பை மீண்டும் பாதுகாப்பு வீதித் தடைகளுடன் பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல்மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் இன்று மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் மா அதிபர்களையும் சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து இந்த உத்தரவுகளை வழங்குவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post