அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்ட நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீரப் புகைக்குண்டுத் தாக்குதல், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய், இனியும் கடன் வாங்காதே, கொள்ளையடித்த பணத்தை திருப்பித்தா, பொருள்களின் விலையை குறையுங்கள் என்று வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றலுடன் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றபோது, பொலிஸார் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்தப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
Discussion about this post