கொழும்பு – இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீதே தாக்குதல் தேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சை நோக்கி நடை பவணியாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினரால் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொரள்ளை – கொட்டாவ பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post