கொழும்பு (Colombo) – நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.இதன் படி, சம்பவ இடமான நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட, ரணால, நவகமுவ என்ற முகவரிக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இந்த மனித எலும்புகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைஅத்தோடு, கடுவெல நீதவான் மற்றும் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் கையிருப்பு அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதியில் மக்களுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post