அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் நேற்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்தனர். அங்கு தங்கி நின்று இன்று நடக்கவுள்ள போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post