கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஒருவர் விளக்கமறியலில் வைத்து, மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்டுள்ளார்.குறித்த காவல்துறை பரிசோதகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்த மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்ட நிலையிலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய கைதிகைதி கூரிய ஆயுதம் ஒன்றினால் பரிசோதகரின் முகத்தில், தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, தாக்கப்பட்ட அதிகாரி அண்மையிலேயே இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post