கொழும்பில் உள்ள வாத்துவ, பொதுப்பிட்டிய பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த கொலைச் சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்றையதினம் (14-09-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணொருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் அதிகாரிகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post