அரசாங்கத்துக்கு எதிராக இன்று கொழும்பில் பெரும் பேரணி நடத்தப்பட்டது.
“நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்” என்ற தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் அணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் மருதானை – டெக்னிகல் சந்தியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றது.
அதையடுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் அதிகமாகக் குவிக்கப்பட்டு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர். பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
பொலிஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்ல முயன்றதை அடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.






Discussion about this post