மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகங்களால் நடத்தப்படும் ‘கொழுந்து பறிக்கும்’ போட்டியானது, தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ள சூழ்ச்சிப் பொறியாகும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி போட்டியை ஒரு சாட்சியாக, தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் எனவும் ஜீவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வைத்த கோரிக்கைகளுள் 20 கிலோ கொழுந்து பறிக்கப்பட வேண்டும் என்பதும் ஓர் நிபந்தனை. இதனை ஏற்பதற்கு நாம் மறுத்துவிட்டோம். 20 கிலோ பறிக்க முடியாது என நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளோம். தோட்டங்கள் காடாக மாறியுள்ளன எனவும் வாதிட்டுவருகின்றோம்.
ஆனால் தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கொழுந்து பறிக்கும் போட்டியில் பங்கேற்று அதுவும் 3 மணிநேரத்துக்குள் 40 கிலோ கொழுந்து பறித்துள்ளனர். இது தொடர்பில் செய்திகள் காணொளி வடிவிலும் வெளியாகியுள்ளன.
20 கிலோ பறிக்க முடியாது என்கிறீர்கள், இது எப்படி சாத்தியம் என நீதிமன்றத்தில் எம்மிடம் வினவப்படுகின்றது. எனவே, எமக்கான அழிவை நாமே தேடிக்கொள்ளகூடாது.
இது ஊக்குவிப்புக்காக செய்யப்படும் வேலை அல்ல, தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ள பொறி” – எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post