சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனாத் தொற்றைக் கண்டறியும் கருவிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், கொரோனாத் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இது ஒரு மோசமான காலகட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் கையிருப்பில் மிகக் குறைந்த கருவிகளே உள்ளன என்று தெரிவித்துள்ள அவர் மக்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post