இலங்கையில் கடும் மருந்துத் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், கொரோனா மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மருந்துகளைக் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நிதியில் இருந்து 1.8 மில்லியன் ரூபாவை மருந்துக் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதால், கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் உள்ள பணத்தை சுகாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post