கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புக்களின்
எண்ணிக்கைக்குப் பின்னால் ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாக எதிர்க்கட்சி
தெரிவித்துள்ளது.
இந்த விடயத்திற்கு பின்னால் மேஜர் ஜெனரல் சம்பந்தப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன
நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
குறித்த நபரே கொரோனா வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட நபர்களின்
உண்மையான எண்ணிக்கைக்கு மாறாக குறைந்த எண்ணிக்கைகளை வழங்கியதாக அவர்
குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா மூலம் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில்
ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு இதுவே காரணம் என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு
விடுத்தார்.உண்மையான புள்ளிவிபரங்களை வழங்குவது இலங்கையில் கொரோனா வைரஸ்
தொற்றுநோயை சமாளிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post