நாட்டில் கொவிட் நிலைமை முன்னரைப் போன்று தீவிரமாகக் காணப்படாத போதிலும், அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக நீங்கவில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளானோரில் 57 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
முன்னரை விட தற்போது கொரோனா நிலைமை தீவிரமாக இல்லாத போதும் , முழுமையாகக் குறைவடையவில்லை.
புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. அதனால் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் என்றார்.
Discussion about this post