சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் சபையில் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் 2023ஆம் ஆண்டு பாதீடு இன்றைய தினம் (28.02.2023) இரண்டாவது தடவையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வரின் பெயர் வாசிக்கப்பட்டபோது அவர் எழுந்து நீதிமன்ற வழக்கிற்குத் தடை ஏற்படாதவாறு இந்த அமர்வில் கலந்துகொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது இந்நாள் முதல்வர் ஆனோல்ட், நீங்கள் பாதீட்டிற்கு ஆதரவளிக்கிறீர்களா இல்லையா எனக் கூறுங்கள் அதைவிடுத்து வேறு ஒன்றும் இங்கே பேச வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதன்போது கொதித்தெழுந்த முன்னாள் முதல்வர் சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை எனக் கோபத்துடன் பதிலளித்துத் தான் இந்த வரவு – செலவு திட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறி அமர்ந்துள்ளார்.
Discussion about this post