துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு – கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை 24 மணித்தியாலத்துக்கும் குறைந்த நேரத்தில் பயணித்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
67 வயதுடைய ரிச்சட் பெர்ணான்டோ என்ற முதியவரே குறித்த சாதனை பயணத்தை முன்னெடுத்தார்.
நேற்று முன்தினம் (25-11-2023) மதியம் 12 மணியளவில் அவர் தமது பயணத்தை ஆரம்பித்து நேற்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அவர், தமது பயணத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post