சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள், சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருக்கின்றது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் கடந்த ஜூலை 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின் கீழான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
அந்த வழிகாட்டல்கள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றின் போது சிறைச்சாலைகள் திணைக்களமானது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறைக்கைதிகளின் உரிமைகள் பலவற்றை மட்டுப்படுத்தியது.
அதன்படி சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கான நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் மட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களை சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் தற்காலிகமாகவும், உத்தியோகபூர்வமற்ற வகையிலும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகவே எண்ணத்தோன்றுகிறது.- என்றார்.
Discussion about this post