நாட்டின் கொவிட்-19 வைரஸ் தொடர்பான எந்த தரவையும் மறைக்கவில்லை என்று
சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொவிட்-19 தொடர்பான இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து
வெளியிடப்பட்ட தரவுகளின் துல்லியம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்று
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த
ஹேரத் தெரிவித்தார்.
எனினும் பல ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதால் தினசரி எண்களைப்
அறிக்கையிடுவதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.சிக்கலான தரவு
சேகரிப்பு மாதிரி மூலம் சரி செய்யப்பட்டவுடன் இது தொடர்பான அனைத்து
பிரச்சினைகளும் தடைசெய்யப்படும்.
தரவை மறைப்பதன் மூலம் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க முடியாது. எனவே
நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து சுகாதார அமைச்சு வெளியிடும்
தரவுகள் குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post