நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது நண்பரைப் பாதுகாக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரவில்லை. காலம் கடந்தாவது தற்போது யோசிக்கிறார்கள், அதை நல்ல விதத்தில் அணுகுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
43 வருடங்களாக மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.
நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்தோடு சேர்ந்து பயணித்த கூட்டமைப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் செயற்பாட்டை அப்போதே நிறைவேற்றி இருக்கலாம்.
ஆனால் தமது நண்பருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக அதைச் செயற்படுத்தாமல் விட்டிருந்தார்கள்.
காலம் கடந்துள்ளபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியினர் இப்போதாவது இதைச் செய்கின்றனர். அதை நாங்கள் நல்ல விதத்திலே பார்ப்போம்- என்றார்.
Discussion about this post