இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் இருந்த பொதுமக்கள் அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இரட்டைக் குடியுரிமையுடன் இருந்தமை தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடம் இருந்து அறிந்தேன் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா மற்றும் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தனர் என்று தனக்கு தகவல் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post