நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு வாக்களித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாச தரப்புக்கு ஆதரவளிப்போம் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் வரையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளனர் என்று ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் தரப்பில் இருந்து ரணிலுக்கு வாக்களித்தவர்களில் 8 பேர் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலை எதிர்த்துக் களமறிங்கிய டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது. ஆயினும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post