கூகுள் பார்ட் (Google Bard) செயற்கை நுண்ணறிவை மக்கள் பயன்படுத்தும் போது, மீண்டும் ஒரு முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தகவல்களின் துல்லியத்தை இருமுறை சரிபார்க்க வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பார்ட் (Bard) மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற சாட்போட்கள் பாரம்பரிய தேடுபொறிகளான கூகுள் (Google), யாஹூ (Yahoo), பிளிங் (Bling) போன்ற சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என முன்னர் கருதப்பட்டது.
இருப்பினும், சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவால் (AI) வழங்கப்படும் தகவல்கள் தவறானவை அல்லது முழுமையான உண்மை அல்ல என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் இங்கிலாந்துக்கான தலைவர் டெபி வெய்ன்ஸ்டீன் (Debbie Weinstein), பார்ட் (Bard) என்பது “குறிப்பிட்ட சாத்தியமான தகவலைத் தேட உரிய இடம் அல்ல” என தெரிவித்தார்.
பிபிசியின் டுடே நிகழ்ச்சியில் கலந்து இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பார்ட் (Bard) “புதிய யோசனைகளை உருவாக்குதல்” ஆகியவற்றுக்கான சிறந்த சோதனையாக இது கருதப்படுகிறது.
“அவர்கள் கண்டறியும் தகவலைச் சரிபார்க்க கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துமாறு மக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) இன் பரவலான அறிமுகத்துடன், அதிக இலாபம் ஈட்டும் கூகுள் (Google) தேடுபொறி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமா என்ற கேள்விகள் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post