குழந்தைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நாட்டில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன் முதல் கட்டமாக புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள இலக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் நிதியுதவியுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கையை உருவாகும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் புதிதாக பிறகும் குழந்தைகளுக்கு அடையாள இலக்கம் ஒன்று வழங்கப்படும் , 15 வருடங்களுக்கு பின்னர் அந்த இலக்கத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்கான டிஜிட்டல் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் முழு கண்காணிப்பின் கீழ் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post