முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏம்பல் குளத்தை அளவீடு செய்யச் சென்ற நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. குளத்தை அளவீடு செய்யப் படகில் சென்றபோது படகு திடீரெனக் கவிழ்ந்தது என்று கூறப்படுகின்றது.
ஒட்டுசுட்டான் வித்தியாபுரத்தைச் சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்னும் 25 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். பொலிஸாரும், கிராமத்தினரும் இணைந்து உடலை மீட்டுள்ளனர்.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post