ஊழலை இல்லாதொழிக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது, வெகு விரைவில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. உணவு பணவீக்கம், உணவல்லாத பணவீக்கம், வட்டி வீதம் ஆகியன குறைவடைந்துள்ளன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறந்தது என்பதை மக்கள் ஏற்கொண்டுள்ளார்கள். ஆகவே அரசாங்கத்திற்கு சார்பாக மக்கள் செயற்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post