மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் பல நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்படும் நிவாரண திட்டங்கள் தேர்தலை நோக்கமாக கொண்டது எனவும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படுத்துவது கடினம் என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கொடுப்பனவுகள் அதிகரிப்புமுதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புற்றுநோய் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சுகவீன கொடுப்பனவு சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.உதவித் தொகையை 5,000 ரூபாவாக உயர்த்தி திருத்தப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தங்க நகைகளை அடகுஇதேவேளை, வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாக தங்கப் பொருட்களை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
Discussion about this post