குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சிறப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தக் கொடுப்பனவு உலக வங்கியின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மேலதிக நாணயத்தாள்கள் அச்சிடப்படமாட்டது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வருமான மார்க்கங்களை இழந்துள்ள இலங்கை அரசாங்கம் தற்போது வங்குறோத்து நிலைமையை அடைந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், இந்த உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post