குரங்கு அம்மைத் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் குரங்கு அம்மைத் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கடந்த 3ஆம் திகதி கண்டறியப்பட்டது.
இவரே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளராவார். களனியைச் சேர்ந்த 20 வயதான இவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார்.
Discussion about this post