வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச திரிபோஷா விநியோகம் செய்வதற்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி தேஜா ஜயசேகரவிடம் வினவிய போது, வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் எரிபொருள் ஒதுக்கீடும் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிட்டார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இவ்வாறான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தேவையான பாரிய வாகனம் இல்லை எனவும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கு போதிய பணம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இவ்வாறான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாநகர சபை அல்லது உள்ளூராட்சி சபை வாகனத்தை கோருவதைத் தவிர வேறு வழி இல்லை என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறான வேண்டுகோளுக்கு இணங்க வெலிகம உள்ளூராட்சி சபையினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post