Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

குத்தகைக்கு கச்சதீவு இந்தியா திட்டம்!

May 6, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
குத்தகைக்கு கச்சதீவு இந்தியா திட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை இலங்கைக்கு வந்திருந்தபோது, பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுடன் இது தொடர்பில் தொலைபேசியில் உரையாடினார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கை பெற வேண்டுமானால், கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற வேண்டும் என இதன்போது அவர் கூறினார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – இலங்கை இடையே கடல் வழி போக்குவரத்தை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் கு. அண்ணாமலை ஆலோசனை கூறியுள்ளார் என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் பிரதமர் இந்திரா காந்தி கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்தபோது, பாரதிய ஜனதாக் கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் ஜகத் பிரகாஷ் நட்டாவிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: இந்தியா திட்டம்கச்சதீவுகுத்தகை
Previous Post

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்! – நட்டத்தில் இயங்குமு் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Next Post

நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை ஜனாதிபதியால் பிரகடனம்!

Next Post
கோட்டாபய தலைமையில் சர்வகட்சி மாநாடு!!

நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை ஜனாதிபதியால் பிரகடனம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.