வட்ஸ்அப் செயலியின் ஊடாக ஆணுறுப்பை குடும்ப பெண்ணிற்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புறநகர் பகுதியொன்றில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி வட்ஸ்அப் செயலி ஊடாக தொடர்ச்சியாக ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு ஒன்று நேற்று (07-08-2023) கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன்படி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபரான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு பல்வேறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபரை இன்று (08-08-2023) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post