தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளிலுள்ள பிரதான வீதியோரங்களில் ஆங்காங்கே சர்க்கரை வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது.
சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை-, அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகளில் சர்க்கரை வெள்ளரிப்பழங்களை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சர்க்கரை வெள்ளரிப்பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், வெள்ளரிப்பழமொன்று 150 ரூபா முதல் சுமார் 850 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், இவ்வௌ்ளரிப்பழங்கள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. பனை ஓலையில் மிகப் பாதுகாப்பாகக் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
Discussion about this post