கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றில் கடமையாற்றும் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது என்னவெனில்
மறுக்கப்பட்ட காசோலை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் வங்கியின் பெண் உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து ஐம்பாயிரம் மற்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவென ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளனர்.
அத்துடன் அந்த பணத்திற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலையினையும் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட முதியவர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முதியவரால் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் அதனையடுத்து பொலிஸார் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதோடு முதியவரை ஏமாற்றிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிசார் நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.
Discussion about this post