கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில்
26/04/2021அன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்
ஒன்று திருட்டு போயுள்ளதாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று (18) கைவிடப்பட்ட நிலையில் சோறன்பற்று பகுதியில்
மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதாக பொது மக்களால் பளை பொலீசாருக்கு தகவல்
வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரினால் பனை ஓலைகளால்
மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.குறித்த
மோட்டார் சைக்கிள் உரிமையாளரிடம் ஒப்படைக்கவும் திருட்டு சம்பவத்தில்
ஈடுபட்டவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பளை பொலிசார்
தெரிவித்துள்ளனர்.


Discussion about this post