கொரோனவினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகளும் 4885
தொற்றாளர்களில் 2374பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கிளிநொச்சி
மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஊடக சந்திப்பில்
தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் இன்றைய தினம் ஊடக
சந்திப்பை மேற்கொண்டிருந்தார் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர் 2374
பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு
வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றால் 38
பேர் இறந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்!
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச, கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி
நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
39500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார் .
Discussion about this post