கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன்
ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து மேலதிக
சிகிச்சைக்கா யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (15) மாலை 5 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 ஆம்
கட்டைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்ற மாணவன் கல்வி நிலையம்
முடிவடைந்ததும் ஏ9 வீதியின் மறுபுறத்தில் மாணவனை ஏற்றிச் செல்வதற்காக
காத்திருந்த தாயிடம் வீதியினை கடக்க முற்பட்ட போது ஆடைத் தொழிற்சாலை
வாகனம் மோதியுள்ளது என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இதன் போது உடனடியாக 07 வயது சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக
கிசிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post