கிளிநொச்சி, விசுவமடுவில் உள்ள இலங்கை வங்கிக் கிளையின் மேல் மாடியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞர் தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்ள தகவலின்படி, 30 வயதுடைய கணேசன் விஜிதரன் என இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் பணத்தைப் பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த இந்த இளைஞர், பணம் வரவில்லை என்று தெரிவித்து வங்கியில் இருந்து வெளியேறியிருந்தார் என்று கிளை முகாமையாளர் தெரிவித்தார்.
இளைஞர் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்ட இடத்தில் சவர அலகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post