கிளிநொச்சியில் திடீரென வீசிய சுழல்காற்றால் 10 வீடுகளும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம், செல்வாநகர் ஆகிய இடங்களில் நேற்று மாலை திடீரென மழையுடன் சுழல் காற்று வீசியுள்ளது.
இரு கிராமங்களிலும் உள்ள 10 வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மரங்கள் பல முறிந்துள்ள நிலையில், மரம் ஒன்றின் கிளை முறிந்து முச்சக்கர வண்டி மீது வீழ்ந்ததில் முச்சக்கர வண்டி சேதமடைந்தது.
Discussion about this post