கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கோரக்கண்கட்டு முன்பள்ளி வீதியிலும், மற்றும் வயல் நிலப் பகுதிகளிலிருந்தும் இராணுவ சீரூடைகள், மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பொது மக்களால் பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த இடத்திலிருந்து மேற்படி பொருட்களை படையினர் மீட்டுள்ளனர்.
இதில் இராணுவத்தினரின் கிட் பாக், நான்கு மிதிவெடிகள், இராணுவத்தினரின் உடைந்த நிலையில் தலைக்கவசம், குண்டு துளைக்காத கவசம் 1, இராணுவத்தினரின் காலணிகள் தண்ணீர் போத்தல் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Discussion about this post