கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அவரது தாய் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
உதயராஜ் அம்சவர்த்தனன் என்ற இந்த இளைஞர் கடந்த வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் தந்தை 2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் தொடர்பான தகவல்கள் இல்லாத நிலையில், தற்போது மகனும் கடத்தப்பட்டுள்ளார் என்று தாய் உதயராஜ் றோஜா முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post