கிளிநொச்சி, திருவையாற்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து நேற்று வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைவிடப்பட்டிருந்த கிணற்றை விவசாயத் தேவைக்காகத் துப்புரவாக்கியபோது அதற்குள் வெடிபொருள்கள் காணப்பட்டன. அது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
கிளிநொச்சிப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நீதிமன்ற அனுமதி பெற்று வெடிபொருள்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.
Discussion about this post