கிளிநொச்சி கோணாவில் பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாடசாலையில் தரம் 10 கல்வி கற்கும் மாணவன் கடந்த வாரம் தனது துவிச் சக்கர வண்டியை தொலைத்த நிலையில் மூன்று நாள்களாக பாடசாலைக்குச் செல்லவில்லை. இந்த வாரம் பாடசாலைக்குச் சென்ற நிலையில் மாணவன் வீட்டுப்
பாடங்களை செய்யவில்லை எனத் தெரிவித்து தடியால் மாணவனை ஆசிரியர் தாக்கினார் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உப அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். முறைப்பாடு கிடைத்ததை பாடசாலை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post